முதலை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
#SriLanka
#Death
#Police
#sri lanka tamil news
Prathees
2 years ago
நில்வலா ஆற்றின் முக்கிய கிளை நதியான திகிலி கங்கையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதலை தாக்கி உயிரிழந்த நபரொருவரின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பங்கம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
முதலை கடித்ததில் உயிரிழந்த நபரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கூலித் தொழில்புரிபவர் எனவும்இ ஆற்றில் குளிப்பதற்கு சென்ற போது முதலை தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.