கஜகஸ்தானில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!

#world_news #fire #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
கஜகஸ்தானில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கஜகஸ்தான், அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் காட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

வனப்பகுதியில் வேகமாக பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர், ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில், காட்டுத் தீயில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!