அதிபர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நிபுணர் குழு

#SriLanka #Susil Premajayantha #Lanka4 #Ministry of Education #education
Kanimoli
2 years ago
அதிபர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக  நிபுணர் குழு

அதிபர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

 அதிபர் சேவை உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் விசேட கலந்துரையாடல் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

 அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வந்த சில முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 சம்பள முரண்பாடுகள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

 இதுவரையில் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

 அடிப்படை பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வை விரைவில் காணுமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!