நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள்
#SriLanka
#Susil Premajayantha
#Lanka4
#Ministry of Education
Kanimoli
2 years ago
2023 ஆம் ஆண்டு, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதல் தவணையின் மூன்றாம் கட்டம் நாளை (12) திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை தவணை நாளை ஆரம்பமாவதையிட்டு இன்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த கேட்டுக்கொண்டதற்கமைய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது.
நுளம்பு பெருக்கமுள்ள இடங்களை கண்டறித்து அவற்றை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபடுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவா் குறிப்பிட்டுள்ளார்.