அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை
#SriLanka
#weather
#Rain
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கனமழை நிலைமை இன்னும் 3 நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அவ்வளவாக பெய்யவில்லை என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.