கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது
கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஹந்தஸ்ஸ, மம்பிட்டிய பிரதேசத்தில் மதுரத்த பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான ஹந்தஸ்ஸ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி மதுரத்த பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவரைக் கொன்று சொத்துக்களைக் கொள்ளையடித்தமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் போது, கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை உடமையாக வைத்திருந்த ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்கள் தவுலகல மற்றும் ஹந்தஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட தங்க நெக்லஸ், வளையல், தங்கத் துண்டு மற்றும் ஏர் ரைபிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.