நீதிமன்ற உத்தரவில் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 3 சிறுமிகள் தப்பியோட்டம்
#Women
#children
#Missing
Prasu
2 years ago
மடாடுகம நகருக்கு அருகில் இயங்கும் பராமரிப்பு நிலையம் ஒன்றிலிருந்து மூன்று சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக மடாடுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் மூவரும் கலென்பிதுனுவெவ, நொச்சியாகம மற்றும் தலாவ பிரதேசங்களில் வசிக்கும் சிறுமிகள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த மூன்று சிறுமிகளும் குறித்த பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.