சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க பதவியேற்கவுள்ளார்

#SriLanka #Governor #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க  பதவியேற்கவுள்ளார்

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க எதிர்வரும் செவ்வாய் கிழமை பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

 பியகமயில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதன்படி, அடுத்த வாரம் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆளுநராக பதவியேற்பார் என ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

 தமது பதவியிலிருந்து விலகுவதாக சபரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!