பசில் வாங்கிய இந்திய கடனில் தான் நாடு இன்னும் ஓடுகிறது: பொதுஜன பெரமுன
பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்த போது பெற்ற கடனுதவியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றும் நாட்டை நடத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 300 மில்லியன் டொலர்கள் மட்டுமே இதுவரையில் நாடு பெற்ற கடன் உதவி என அவர் கூறுகிறார்.
தொலைக்காட்சியுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் ஆனால் அதற்காக அடிக்கடி கோரிக்கை விடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் பல மாவட்டத் தலைவர்கள் அமைச்சுப் பதவி கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.