முல்லேரியா குழந்தையின் மரணம் தொடர்பில் தாத்தாவும் கைது

#SriLanka #Arrest #Police #Crime #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
முல்லேரியா குழந்தையின் மரணம் தொடர்பில் தாத்தாவும் கைது

முல்லேரிய, ஹல்பராவ பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 8ம் திகதி மாலை முல்லேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலபே ஹல்பராவ பிரதேசத்தில் சிறு குழந்தையின் சடலம் ஒன்று இருப்பதாக முல்லேரிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

 ஹல்பராவ பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயது 6 மாதங்களைச் சேர்ந்த ஜொனாதன் மார்க் பொன்சேகா என்பவரின் சடலமே இரத்தக் காயங்களுடன் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டது.

 சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், புல் வெட்டும் இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது, ​​குழந்தையின் மீது பிளேட் தாக்கியதாகவும், இதனால் பயந்து கண்ணாடி போத்தலால் குத்தி குழந்தை இறந்ததாக காட்ட முயற்சித்ததாகவும் சந்தேக நபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 இதனையடுத்து குறித்தகுழந்தையின் தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!