நிதி மோசடி வழக்கில் முன்னாள் பெண் மாநகர சபை உறுப்பினர் ரிமாண்ட்
கெஸ்பேவ நகரசபையில் ஒரு கோடியே பதினேழு இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பல முறைப்பாடுகளின் பிரகாரம், பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய முன்னாள் பெண் மாநகர சபை உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு திட்டங்களுக்குப் பணத்தைப் பயன்படுத்தி பல்வேறு எம்.பி.க்களின் பெயர்களைக் கூறி இந்த மோசடிகளை அவர் செய்து வருவதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு எதிராக பிலியந்தலை பொலிஸில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 11 ஆகும். பணம் பெறப்பட்டதை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் மாநகர சபை உறுப்பினரின் தொலைபேசியில் வாட்ஸ் அப் செய்திகள் மூலம் பணக் கோரிக்கை பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பணத்தை தருமாறு கோரிய போது சந்தேக நபர் தம்மை அச்சுறுத்தியதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.