சோமாலியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 3 இராணுவம் உட்பட 9 பேர் பலி
#world_news
#Attack
#Somalia
#Lanka4
#Terrorist
#தாக்குதல்
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை உணவகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவுவீரர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
வெள்ளியன்று இரவு தொடங்கிய இந்த தாக்குதல் சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்ததுள்ளது. சம்பவ இடத்தில் திரண்ட ராணுவம் மற்றும் பொலிஸார் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 84 பேர் உணவகத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அல்-கெய்தாவின் கிழக்கு ஆப்பிரிக்காவின் இணை நிறுவனமாக அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொற்றுபேற்றுள்ளது. இந்த உணவகத்தில் வெளிநாட்டுப் பயணிகள், அரசியல் தலைவர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் ராணுவம் மற்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.