இலங்கையின் தனித்துவமான சமையல் கலை உலகத்தவர்களை ஈர்த்துள்ளது: ஜனாதிபதி பெருமிதம்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
இலங்கையின் தனித்துவமான சமையல் கலை  உலகத்தவர்களை ஈர்த்துள்ளது: ஜனாதிபதி பெருமிதம்

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத்துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன், அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட "2023 சமையல் கலை உணவு கண்காட்சி 2023" இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இலங்கை செஃப்ஸ் ஃபோரம் ஆண்டுதோறும் இலங்கை முழுவதும் உள்ள சமையல் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் உணவு மற்றும் உணவு கண்காட்சியை ஏற்பாடு செய்து வருகிறது.

 இவ்வருட கண்காட்சியானது 88 தயாரிப்பு மற்றும் சேவை நிலையங்களை உள்ளடக்கியிருந்ததுடன், அவைகளை அவதானிக்க ஜனாதிபதியும் இணைந்துகொண்டார்.

 கண்காட்சியில் பங்குபற்றிய சமையல் கலைஞர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

 இத்துறையின் முன்னேற்றத்திற்காக சமையல் பாடசாலையொன்றை ஸ்தாபித்தல், சமையற்காரர்களை தரவரிசைப்படுத்துவதற்கான முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

images/content-image/2023/06/1686402683.jpg

images/content-image/2023/06/1686402667.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!