பிரெஞ்சு பத்திரிகையில் வெளிவந்த இந்துக்களின் பாரம்பரிய திருவிழா
இந்தோனேசியாவில் இந்து மக்கள் எரிமலை மீது ஏறி கால்நடைகள் மற்றும் உணவுகளை அந்த எரிமலை பள்ளத்தாக்கினுள் வீசி தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள்.
இந்தோனேசியாவில் ஜஹர்தா என்னும் நகரத்திலிருந்து 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ப்ரோமோ என்று அழைக்கப்படும் எரிமலையில் யாத்னியா கசாதா என்று அழைக்கப்படும் திருவிழாவின் ஒரு பகுதியாக ஆடுகள் கோழிகள் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தமது முதுகில் சுமந்த வண்ணம் அந்த எரிமலையின் மீது ஏறி அந்த எரிமலை பள்ளத்தாக்கினால் தான் கொண்டு வந்திருந்தவற்றை வீசி எறிந்து தமது நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மேட்டு நிலங்களை சுற்றியுள்ள, ஆதிகாலம் தொடக்கம் வாழ்ந்து வருகின்ற இந்து மக்களில் தங்கன் என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்கள் இந்த வழிபாடுகளை மேற்கொள்ளுகின்றார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மாயாபாகன் என்ற அரசின் இளவரசி தோரோ அந்தன் மற்றும் அவரது கணவரும் குழந்தை வரம் வேண்டி எரிமலையின் மீது வழிபாடுகளை மேற்கொண்டிருக்கும் பொழுது அங்கு அந்த எரிமலை இருந்து தோன்றிய இறைவன் அவர்களுக்கு 25 குழந்தைகளுக்கு உறுதி அளித்தார் ஆனால் ஒரு நிபந்தனை வைத்தார் கடைசி குழந்தையான 25 வது குழந்தையை தனக்கு காணிக்கையாக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை அவர்களும் அதற்கு அதற்கு உடன்பட்டார்கள்.
ஆனால் காலப்போக்கில் அந்த நேர்த்திக் கடனை அவர்கள் நிறைவேற்றவில்லை . அதன் பின்பு பல்வேறு பட்ட இயற்கை அனர்த்தங்களாலும் அந்நிய படையெடுப்புகளாலும் அந்த கிராமமும் அந்த மக்களும் பல துன்பங்களை அனுபவித்தனர். பின்னர் அந்த கடைசி மகனான அந்த 25 வது மகன் தன்னைத்தானே அந்த எரிமலையினுள் நேர்த்திக்கடனாக செலுத்திக்கொண்டான்.
தங்களது நாட்டில் வேளாண்மை செழிக்கவும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழவும் அன்று தொடக்கம் இன்று வரை இந்த மக்களால் இந்த வழிபாடு ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. எமது கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களை போன்று அவர்களும் அந்த கோயில்களில் பல நாட்கள் கொண்ட திருவிழாவை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் எரிமலை மீது நேர்த்திக்கடன்களை செலுத்திக் கொள்கின்றனர்.
