வவுனியா விபச்சார விடுதியில் இருந்த 7 பெண்களுக்கு சமூக நோய்
#SriLanka
#Vavuniya
#Arrest
#Women
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் குழுவொன்று சமூக நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக வவுனியாவில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பிரதேசத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த பெண்களை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அனைவருக்கும் சமூக நோய்கள் இருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 7 ஆகும்.
இதன்படி, சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதுடன், பெண்களுடன் உடலுறவு கொண்டவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.