இன்று புத்தளம் பாலாவியில் சட்டவிரோத பீடி இலைகளுடன் 3 பேர் கைது

#SriLanka #Lanka4 #இலங்கை #லங்கா4
இன்று புத்தளம் பாலாவியில் சட்டவிரோத பீடி இலைகளுடன் 3 பேர் கைது

இன்று புத்தளம் பாலாவி பகுதியில் சட்டவிரோதமாக அதிகாலை கடத்தப்பட விருந்த பீடி இலைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படைகளால் தடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது சம்பவ இடத்திலேயே 3 பேர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டனர்.

கற்பிட்டியிலிருந்து நீர்கொழும்பிற்கு பீடி இலைகளை லொறியொன்றில் கடத்திச் செல்ல முயன்ற போதே அவர்கள் பாலாவியில் வைத்து கைது செய்ததாக பொலிஸ் விஷேட அதிரப்படையினர் தெரிவித்தனர்.

 இதன்போது 36 உரைகள் அடங்கிய 1100 கிலோகிராம் பீடி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் லுனுவில பகுதியைச் சேர்ந்த 34, மற்றும் 25 வயதுடைய இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 இந்த சட்டவிரோத பீடி இலைகள் கடல்மார்க்கமாக இந்தியாவிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!