வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்த யாழ் விவசாயி!

#SriLanka #Jaffna
Mayoorikka
2 years ago
வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்த யாழ் விவசாயி!

வெங்காய செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

 அச்சுவேலி பகுதிகளை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களை குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார்.

 இதனூடாக வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை 18 வெற்றி கண்டுள்ளார். 

இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக வடமாகாண விவசாய பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இன்றைய தினம் நடிகை செய்யும் முறை காண்பிக்கப்பட்டது.

 அத்துடன் குறிந்த இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது அதன் மூலம் எப்படி நடுகையினை மேற்கொள்வது போன்ற விடயங்கள் பயனாளிகளுக்கு காண்பிக்கப்பட்டது குறைத்த நடுகை முறை வெற்றி அளிக்கும் முறையாக விவசாய அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டால் அதனை அனைவருக்கும் பரிந்துரைப்பதற்கு முன்வரவுள்ளனர்.

 நிகழ்வில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி முன்னாள் விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் விவசாய அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

images/content-image/2023/06/1686376631.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!