வாஷிங்டனில் உள்ள இந்தியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மோடி
#India
#America
#D K Modi
Prasu
2 years ago
பிரதமர் மோடி இம்மாதம் 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில் அவர் செல்கிறார்.
22-ந் தேதி, அவர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு, ஜோ பைடனும், ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார்கள்.
23-ந் தேதி, அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இத்தகவலை அமெரிக்க இந்திய சமுதாய தலைவர் டாக்டர் பாரத் பராய் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு பிரமாண்ட அரங்கத்தில் 40 ஆயிரம் இந்தியர்களிடையே பிரதமர் மோடியை உரையாற்ற வைக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், நிகழ்ச்சி நிரல் உறுதி செய்யப்படாததால், அதை இறுதி செய்ய முடியவில்லை.