5 மாதங்களில் 2300 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள்!
#SriLanka
#Dollar
Mayoorikka
2 years ago
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 2300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பியுள்ளதாகவும், மே மாதத்தில் மட்டும் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மார்ச் மாதத்தில் 868.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஏப்ரலில் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பியதாகவும் அமைச்சர் கூறினார்.