நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்படும்

#SriLanka #weather #Rain #Lanka4
Kanimoli
3 years ago
நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்படும்

நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4