அவிசாவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான களனிவெளி ரயில் பாதையை நிர்மாணிக்க திட்டம்

#SriLanka #Bandula Gunawardana #Rain #Lanka4
Kanimoli
2 years ago
அவிசாவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான களனிவெளி ரயில் பாதையை நிர்மாணிக்க திட்டம்

களனிவெளி புகையிரதத்தை அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி ஊடாக ஓபநாயக்க வரை நீடிக்கும்போது, ​​அவை நெடுஞ்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை இடமாற்றம் செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் எஸ். குணசிங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 அவிசாவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான களனிவெளி ரயில் பாதையை 20230 ஆம் ஆண்டு அரசாங்க காணித் திட்டத்தில் காட்டப்பட்டுள்ளவாறு நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அவிசாவளை புகையிரத நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் எனவும், அதற்கமைவாக குறித்த புகையிரத நிலையத்தில் ஐந்து புகையிரதங்களை நிறுத்துவதற்கு திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 களனிவெளி புகையிரத பாதை நீடிப்பு தொடர்பில் ஆராய முன்வரும் ஆணைக்குழு சார்பில் புகையிரத திணைக்களத்தின் சார்பில் பிரதி பிரதம பொறியியலாளர் பி.ஜே. பிரேமதிலக்கவை நியமிப்பது பொருத்தமானது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!