பத்தரமுல்ல கடவுச்சீட்டு அலுவலகத்தில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
#SriLanka
#Colombo
#Death
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
பத்தரமுல்லை சுஹுருபாயவில் உள்ள குடிவரவு திணைக்கள அலுவலகத்தில் நாற்காலியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் துப்புரவுப் பிரிவில் கடமையாற்றும் 73 வயதான ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.