நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு! புதிய விலைகள்

#SriLanka #prices #Litro Gas #Gas
Mayoorikka
2 years ago
நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு! புதிய விலைகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 வீசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

 இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபாய் ஆகும். அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1281 ரூபாவாகும்.

 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!