ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு!

#India #Death #Accident #Train #Breakingnews
Mani
1 year ago
ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு!

ஒடிசாவில் சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 747 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 56 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.