பிரபல இந்திய யூடியூபரின் வாகனம் மோதி பெண் மரணம்

#India #Death #Accident
Prasu
3 years ago
பிரபல இந்திய யூடியூபரின் வாகனம் மோதி பெண் மரணம்

பிரபல யூடிபர் இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

 மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடந்த இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான் சென்னையை சேர்ந்தவர். 

இவர் இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருடைய யூடியூப் செனலில் 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் சென்றபோது இவருடைய கார் விபத்தில் சிக்கியதாக கூறுப்படுகிறது. இந்த விபத்தில் 55 வயதுடைய பத்மாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இர்பானின் கார் டிரைவர் அசாரூதின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4