கார்ட்டூன் கதாபாத்திரமாக மாற 1 லட்சம் டாலர் செலவு செய்த ஆஸ்திரேலிய பெண்

#Australia #Dollar #Model #Surgery
Prasu
3 years ago
கார்ட்டூன் கதாபாத்திரமாக மாற 1 லட்சம் டாலர் செலவு செய்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் பாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார்.

பொதுவாகவே பெண்களுக்கு பார்பி பொம்மைகள் விருப்பமான ஒன்றுதான். தங்களது வீடுகளில் விதவிதமான நிறத்தில், விதவிதமான ஆடை அணிந்த பார்பி பொம்மைகளை வாங்கி வைப்பதுடன் அவைகளுடன் விளையாடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டவர்களும் உண்டு.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஃபாரஸ்ட். இவருக்கு வயது 25. இவர் தான் பார்பி பொம்மை போல் மாறுவதற்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளார். 

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதற்காக தனது மார்பகத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

மேலும், கை வயிறு முதுகு தொடை கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை மேற்கொண்டுள்தோடு, பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் இருபாலராலும் நான் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், அதே நேரம் தன்னுடைய தன்னம்பிக்கை அளவு உயர்ந்துள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4