கனடாவில் படிப்பு,தொழில் என்பது உண்மை. அதையே வைத்து போலி விளம்பரங்கள் பரப்பப்படுகிறது மக்களே அவதானம்
#SriLanka
#Canada
#Job Vacancy
#Passport
#Lanka4
#Visa
Kanimoli
2 years ago
கனடாவில் படிப்பு விசா, தொழில் விசா, விசிட் விசா என்பது உண்மை. அதையே வைத்து போலி விளம்பரங்களே பல மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது . அவதானம்.இதை எனது தமிழர்கள் மட்டுமல்ல பிற நாட்டுக்காரர்களும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்கிறார்கள்.
இலங்கை சென்ற மாதம் இப்படி போலியாக கனடாவில் கல்லூரி பதிவை காட்டி தலா 14 லட்சம் ரூபாவை மாணவர்களிடம் பெற்று 700 கோடி ரூபாக்களை பெற்றுக்கொண்டு ஒரு நிறுவனம் தலை மறைவாகி உள்ளது. இதன் உன்மை நிலவரத்த்தை கனடாவில் வாழும் உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அணுகுங்கள்.
வெளி நாட்டு ஆசையில் ஆராயாமல் இடை தரகர்களிடம் மாட்டி உங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழக்கவேண்டாமென lanka4 ஊடகம் அன்போடும் அக்கறையோடும் கேட்டுக்கொள்கிறது.
மேலும் இப்படியான சமூக அக்கறை செய்திகளை பார்வையிட எமது lanka4.com உடன் இணைந்திருங்கள்