முன்னாள் மாநகர சபை முதல்வர் அனோல்ட் யாழ் நீதிமன்றில் முட்படுத்தப்பட்டார்!

#SriLanka #Jaffna #municipal council
Mayoorikka
2 years ago
முன்னாள் மாநகர சபை முதல்வர் அனோல்ட் யாழ் நீதிமன்றில் முட்படுத்தப்பட்டார்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோது  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிய வருகின்றது. 

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!