சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
#Cinema
#Tamil Nadu
#TamilCinema
Mani
2 years ago
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் தெலுங்கில் ‘மாவீருடு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. 'மாவீரன்' படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் படக்குழுவினர் படத்தின் வேலைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், சரிதா நடித்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.