அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுப்பு

#SriLanka #Mullaitivu #Mullivaikkal
Kanimoli
2 years ago
அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு தழுவியரீதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், மே 18 இனப்படுகொலையினை அடுத்த சந்ததிக்கு நினைவூட்டுமுகமாக, இறுதியுத்தத்தில் பொதுமக்களின் பசியாற்றிய முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் இன்று காலை 9 மணியளவில் அம்பாறை திருக்கோயில் பிரதான சந்தைவளாகத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

 இதன் பொழுது அம்பாறை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டத்திற்கான அரிசியை, திருக்கோயில் பகுதியில் உள்ள வீடுகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து பெற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்றது. இவ்வாறு ஆக்கப்பெற்ற கஞ்சி உறவுகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக உயிர்நீத்த உறுவுகளிற்கு ஈகைசுடரற்றி செலுத்தபட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!