அநுராதபுர வைத்தியசாலையில் நோயாளியை கொலை செய்த இருவர் கைது

#Arrest #Murder #Hospital #Anuradapura
Prasu
2 years ago
அநுராதபுர வைத்தியசாலையில் நோயாளியை கொலை செய்த இருவர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேக நபரும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவரும் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி, விஹாரை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரும், மதவாச்சி, கோனா கும்பக்கொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேக நபர்கள் இருவரிடமும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கையடக்கத் தொலைபேசி, சிம் அட்டை மற்றும் கொலையின்போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் என்பனவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!