வெசாக் தினத்தில் புத்தர் சிலைக்கு அடியில் இருந்து சிசு ஒன்று மீட்பு

#SriLanka #Police #kandy #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
வெசாக் தினத்தில் புத்தர் சிலைக்கு அடியில் இருந்து  சிசு ஒன்று மீட்பு

கண்டி வத்தேகம அல்கடுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் புத்தர் சிலைக்கு அடியில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர சிகிச்சை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வத்தேகம பொலிஸார் சிசுவை கண்டுபிடித்துள்ளனர்.

 ஆண் சிசு ஒன்று உயிருடன் காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் அவசரப் பிரிவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குழந்தையின் தாய் மற்றும் தந்தையை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!