நடிகர் சரத்பாபுவின் உடல்நலம் குறித்து தகவல் அளித்த சகோதரி

#Death #Actor #TamilCinema #Hospital
Prasu
2 years ago
நடிகர் சரத்பாபுவின் உடல்நலம் குறித்து தகவல் அளித்த சகோதரி

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (வயது 71). வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 'வென்டிலேட்டர்' மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, நடிகர் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின. தெலுங்கு, தமிழ் ஊடகங்களிலும் இது தொடர்பாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், நடிகர் சரத்பாபு குணமடைந்து வருவதாகவும், அவர் உயிரிழந்துவிடதாக வெளியான செய்திகள் பொய்யானவை என்றும் நடிகர் சரத்பாபுவின் சகோதரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நடிகர் சரத்பாபுவின் உதவியாளர் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள தகவலில், நடிகர் சரத்பாபு மரணமடைந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வெளியான அனைத்து செய்திகளும் தவறானவை. சரத்பாபு குணமடைந்து வருகிறார். 

அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சரத்பாபு முழுமையாக குணமடைந்து விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார் என்று நான் நம்புகிறேன். சமூகவலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!