சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் VBZ பேருந்து தீப்பற்றிக் கொண்டுள்ளது. பயணிகள் உயிர்தப்பினர்.

#Switzerland #Bus #Lanka4 #சுவிட்சர்லாந்து #தீ_விபத்து #fire #லங்கா4
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் VBZ பேருந்து தீப்பற்றிக் கொண்டுள்ளது. பயணிகள் உயிர்தப்பினர்.

சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில்  VBZ பேருந்து சாரதி வாகனத்தை செலுத்துகையில் தீ வாசனையை உணர்ந்த சிறிது நேரத்தில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்தது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை ஹாங்கர்பெர்க்கில் நிகழ்ந்துள்ளது.

இந்த தீயினால் பஸ் முழுவதுமாக எரிந்து அடர்ந்த புகை மூட்டம் சூரிச் மாவட்டத்தில் முழுவதுமாக காணப்பட்டது. இதன் போது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்தில் இருந்து சரியான நேரத்தில் காயமின்றி வெளியேறினா். பயணிகள் சுமார் 50 பேரளவில் இருந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

சூரிச் காப்பாற்றல் மற்றும் பாதுகாப்பு பிரிவு அறிக்கை வெளியிடுகையில் இத்தீகாரணமாக புகை மூட்டத்தை தொலைவிலே காணக் கூடியதாக இருந்ததுடன் அருகில் இருந்து ஈடிஎச் கட்டிடத்திற்கு தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது . இருப்பினும் இத்தீ காரணமாக ஏராளமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.

 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4