குவாட் அமைப்பில் புதிய உறுப்பினர்களை இணைக்க திட்டமில்லை - அமெரிக்கா அதிரடி
#America
#world_news
#Member
#Quad
Prasu
2 years ago

குவாட் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி எவ்வித திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு விரைவில் நடைபெற இருப்பதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலிய பிரமதர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் குவாட் உச்சிமாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த உச்சுமாநாடு அடுத்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.



