வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனை கொலை செய்த சந்தேக நபர்கள் கைது

#SriLanka #Arrest #Police #Murder #Anuradapura #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனை கொலை செய்த  சந்தேக நபர்கள் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாலா எனப்படும் மதுசங்க ஜயரத்ன எனப்படும் 27 வயதுடைய ஜயரத்ன மற்றும் அவரது 23 வயது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!