சுவிட்சர்லாந்து சிறுவர் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

#world_news #swissnews #Tamilnews
Prabha Praneetha
3 years ago
சுவிட்சர்லாந்து சிறுவர் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

ஐரோப்பா முழுவதிலும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மருந்து பொருட்களில் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

 சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இவ்வாறு மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 மருந்து பொருள் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு வழங்குமாறு சுகாதார அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சிறுவர் மருத்துவ நிபுணர்கள் சுகாதார அமைச்சர் எலாய்ன் பீரெஸ்ட்டிற்கு கடிதம் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

 ஆன்ட்டி பயோட்டிக், வலி நிவாரணிகள், ஆஸ்துமா மருந்துகள் போன்ற பல்வேறு மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலை வருவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

 மருந்து பொருள் தட்டுப்பாடு காரணமாக வழமையாக அளிக்கப்படும் சிகிச்சைகளை வழங்க முடியாதுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4