சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதலில் 33 வயது நபர் காயம் – பொலிஸார் சாட்சிகளை தேடி வருகின்றனர்!

#Switzerland #Crime #சுவிட்சர்லாந்து #Knife
சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதலில் 33 வயது நபர் காயம் – பொலிஸார் சாட்சிகளை  தேடி வருகின்றனர்!

சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சனிக்கிழமை மாலை Zinistrasse வீதியில் இரண்டு ஆண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவரில் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்தார் மற்றவர். சூரிச் நகர காவல்துறையானது  ஞாயிற்றுக்கிழமை அறிவித்தபடி, சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு Zinistrasse 7  வீதிக்கு அழைக்கப்பட்டு தளத்தில், கத்தியால் குத்தப்பட்டவரை வைத்தியசாலைக்கு அவசர சேவைகள் மூலம் அழைத்துச் சென்றனர்.

பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் இவ்விருவருக்கிடையில் ஏற்பட்ட தர்க்கத்தினால் கத்தியால் குத்தியவர் தப்பியோடியுள்ளார்.

அதே வேளை சூரிச் மாநில பொலிஸார் ஒரு 30 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய கூடியதாகவிருந்தது. இருப்பினும் நிகழ்வுகளின் போக்கு இன்று வரை சரியாக தெரியவில்லை.

இதனை தீவிர வன்முறைக் குற்றத்திற்கான அரச வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் தீவிர சூரிச் மாநில  காவல் துறையினர் தடயவியல் நிபுணர்களுடன் விசாரணை, ஆதாரங்களை பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4