ஹரகட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் வாக்குமூலத்திற்கு அமைய 10 துப்பாக்கிகள் மீட்பு

#SriLanka #drugs #Arrest #Investigation #Weapons #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
ஹரகட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் வாக்குமூலத்திற்கு அமைய 10 துப்பாக்கிகள் மீட்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள  ஹரகட்டா மற்றும்  குடு சலிந்து ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது  கிடைத்த தகவலின் அடிப்படையில்  சுமார் 10 துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிகள்  பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. எனினும், அந்த துப்பாக்கிகளை பயன்படுத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஹரகட்டா மற்றும்  குடு சலிந்து ஆகியோர் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!