காருக்கு வழிவிட மறுத்த நபரை கொலை செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#India #Delhi
Mani
2 years ago
காருக்கு வழிவிட மறுத்த நபரை கொலை செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய டெல்லியில் உள்ள ராஜேந்திரநகரில், பங்கஜ் தாக்கூர் என்ற 39 வயது டெலிவரிமேன், தனது மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்தினார். அப்போது ஒரு காரில் வந்த இரு இளைஞர்கள் அவரை அணுகி மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும்படி கூறினர்.

ஆனால் பங்கஜ் தாக்குர் அதை எடுப்பதில் காலம் தாழ்த்தியதாகத்தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் காரில் இருந்து இறங்கி பங்கஜ் தாக்குரை சரமாரியாக தாக்கினர்.அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார், போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துரதிஷ்டவசமாக அங்கு சிகிச்சை பலனின்றி வேதனையில் உயிரிழந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மணீஷ்குமார் (19), லால் சந்த் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். காருக்கு அடிபணிய மறுத்த நபரை இளைஞர்கள் சிலர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!