திருமணத்துக்கு தயாரான இளம் யுவதி பாரவூர்தி மோதி பலி

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #srilankan politics #Sri Lanka President
Prabha Praneetha
2 years ago
திருமணத்துக்கு தயாரான இளம் யுவதி பாரவூர்தி மோதி பலி

களுத்துறை  மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரசேத்தில் இருவர் மீது பாரவூர்தியொன்று மோதியதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை வெந்தேசிவத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இமாஷா கருணாதிலக்க என்ற யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று இரவு களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இருவரும், மீன் வாங்குவதற்காக, கல் அஸ்ஹேன சந்தியில் தாம் பயணித்த உந்துருளியை நிறுத்தியுள்ளனர்.

அதன்போது, ​​களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பாரவூர்தியொன்று இருவரையும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது யுவதி உயிரிழந்துள்ளார்.

மற்றைய இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!