கடல் அலையில் சிக்கி பொறியியல் மாணவி உயிரிழப்பு!
#world_news
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
இங்கிலாந்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த இந்திய பொறியியல் மாணவியின் உடல் நாளை ஐதராபாத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவின் தெலுங்கானா, ஐதராபாத் நகரை சேர்ந்த சாய் தேஜஸ்வி கொம்மரெட்டி, விண்வெளித் துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று உள்ளார்.
இந்த நிலையில், தோழிகளுடன் சேர்ந்து கடற்கரைக்கு சென்று கடல் அலையில் சிக்கியுள்ளார். அவர் உட்பட 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் தேஜஸ்வியின் உடலை மீட்புக் குழுவினர் முதலில் மீட்டனர். அதற்கடுத்த நாள் மற்ற 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன.
இதனையடுத்து, தேஜஸ்வியின் உடல் நாளை (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது.