பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம்: அக்குரணையில் பதற்றம்
#SriLanka
#Sri Lanka President
#Bomb
#BombBlast
#Attack
Mayoorikka
2 years ago

கண்டி அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார், அக்குரணை பள்ளிவாசலுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த தகவலை அடுத்து அக்குரணை பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அக்குரணை மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தமது கட்டளையை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அக்குரணை பகுதி மக்கள் மத்தியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.



