கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்புார் சங்கத்தின் ஊடக சந்திப்பு 

#pressmeet #Kilinochchi #Tamil People #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்புார் சங்கத்தின் ஊடக சந்திப்பு 

கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்புார் சங்கத்தின் ஊடக சந்திப்பு  கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்போர் சங்க அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இன்று பகல் இடம்பெற்றது.

இதன்போது, மேச்சல் தரை இன்மையால் ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும், தமது நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அரசு, சீனா உள்ளிட்ட நாடுகளிற்கு விரைவாக காணிகளை வழங்க முனைவது தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் வைரமுத்து கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் தேவராசா நிகிதேவன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

நாங்கள் யுத்தகாலத்திலும், அற்கு பினனரான 13 வருடங்களாக எமக்கான மேச்சல் தரை ஒன்றை தாருங்கள் என கேட்டு வருகின்றோம். இவ்விடயம் தொடர்பில் அரச அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் பலமுறை கேட்டுள்ளோம்.

ஆனால் இன்றுவரை மேச்சல் தரை இல்லாமல் பல்வேறு சவால்களிற்கு நாங்கள் முகம் கொடுக்கின்றோம். இதனால் எமது உற்பத்திகள் குறைந்துள்ளது. நாங்கள் கால்நடை வளர்ப்பதில் பாரிய சவால்களிற்கு முகம் கொடுக்கின்றோம்.

54ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னரான காலப்பகுதியில் இரணைமடு குளத்திற்கு தெற்கு பகுதியில் சுரியபுரம் எனும் இடத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

குறித்த பகுதியில் கால்நடைகள் மேச்சலிற்காக விடப்பட்டு வந்தது. அதன் பின்னர் அரசாங்கம் தமது தேவைக்காக அவற்றை மீள பெற்றுள்ளது. விமான நிலையம் உள்ளிட்ட தேவைகளிற்கான அப்பகுதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆயினும் குறித்த பகுதியில் எமது கால்நடைகளை அனுமதியுடன் மேச்சலிற்கு விட்டு வருகின்றனர். தற்பொழுது, வேறு மாவட்டத்தினர், வேறு தெசத்தினருக்கு காணிகள் வழங்க நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

உண்மையான தேவையுடைய எமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்காமல், சீனா உள்ளிட்ட நாடுகளிற்கு காணிகளை கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல்வாதிகள் ஊடாக அறிகின்றோம்.

இங்குள்ள பிரதேச மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது, சீனாவிற்கு்ம, வெளி மாவட்டத்தில் உள்ளவர்களின் சில தேவைகளிற்கும் விரைவாக காணி வழங்குவதில் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் கவலை அடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!