அமைச்சரவையில் மாற்றம்: .. ஆளுநர்களும் புதிதாக நியமிக்கப்படுவார்கள்..

நிலுவையில் உள்ள அமைச்சரவை மாற்றம், காலாவதியான ஆளுநர்கள் நியமனம் மற்றும் தற்போது வெற்றிடமாக உள்ள 12 தூதுவர்களின் நியமனம் ஆகியவற்றை ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கத்தின் உயர்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வட்டாரங்களின்படி, தற்போது பதவிக்காலம் முடிவடைந்துள்ள ஒன்பது ஆளுநர்களும் நீக்கப்பட உள்ளதாகவும், அவர்களில் சிலர் மீண்டும் நியமனம் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் 9 பேரில் ஐந்து பேரை பொதுஜன பெரமுனவின் கட்சியிலிருந்து ஏனைய நால்வரை ஐ.தே.கவிலிருந்தும் நியமிக்க இணக்கம் காணப்பட்டது.
இதன்படி தற்போதுள்ள ஆளுநர்களில் ஐவரை நியமிக்குமாறு பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளைஇ ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்படவுள்ள ஆளுநர்களின் பெயர்கள் அன்றைய தினங்களில் ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டன.



