இந்திய-இலங்கை படகு சேவைக்கு இந்தியாவின் அனுமதி தாமதம்
#India
#SriLanka
#sri lanka tamil news
#Ship
#Lanka4
Prathees
2 years ago
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் இலங்கை வழங்கியுள்ளதாக கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்திய தரப்பிலிருந்து மேலதிக அனுமதிகள் கோரப்பட்டு வருவதாக
அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவையை ஆரம்பிப்பதற்கு காங்கசந்துறை துறைமுகத்தில் தேவையான அனைத்து வசதிகளையும் மே மாதம் முதல் வாரத்திற்குள் பூர்த்தி செய்ய முடியும் எனவும் கப்பல் மற்றும் விமான சேவைகள் திணைக்களத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவை ஆரம்பிக்கப்படும் திகதியை இதுவரை குறிப்பிட முடியாது என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.