காலி முகத்திடலில் கூட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை

கொழும்பு காலி முகத்திடலில் நாளை (20ஆம் திகதி) முதல் இசை நிகழ்ச்சிகள், அரசியல் சந்திப்புகள் போன்றவற்றுக்காக பொதுமக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடும் இடமாக மாற்ற வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (17) கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் காலி முகத்திடலில் சமய நிகழ்வுகளை மாத்திரம் நடத்த அனுமதிக்கப்படும். மத விழாக்களைத் தவிர வேறு எந்த விழாவும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
காலி முகத்திடல் பிரதேசத்தின் அழகைப் பாதுகாத்தல் மற்றும் சேதமடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
சமூகப் பொறுப்புத் திட்டமாக, காலி முகத்திடலின் அபிவிருத்தியை துறைமுக அதிகாரசபை மேற்கொண்டுள்ளதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக துறைமுக அதிகாரசபை 220 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.
கடந்த போராட்டத்தின் போது காலி முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்ய 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
இப்போராட்டத்தின் போது பெரும் எண்ணிக்கையான மக்கள் காலி முகத்திடல் பகுதியில் கூடாரம் கட்டி மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தங்கியிருந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.



