வெளிநாட்டு வேலை வாய்ப்பு: பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு முன்னுரிமை

#Job Vacancy #SriLanka #sri lanka tamil news #Japan #Canada #SaudiArabia #Lanka4
Prathees
2 years ago
வெளிநாட்டு வேலை வாய்ப்பு:  பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு முன்னுரிமை

ஜப்பானில் தாதியர் வேலைகள், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஹோட்டல் துறையில் தொழில் வாய்ப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தாதியர் வேலை வாய்ப்புகள், சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் தொழில் வாய்ப்புகள் பாரிய அளவில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. ,

இந்த வேலைத் தேவையை பூர்த்தி செய்ய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வழங்க முடியவில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கும் இடையில் இன்று (18) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், அப்போது பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை இலக்காக கொண்டு தொழில் பயிற்சி அதிகார சபையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன்களைக் கொண்ட நிபுணர்களைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு தேசிய தொழில் தகைமைகளை வழங்குவது மற்றும் பிற தொழில்முறை சான்றிதழ்களை வழங்கும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதில், தொழிற்பயிற்சி அதிகாரசபையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி, தொழிற்பயிற்சிக்கான மாணவர்களை பதிவு செய்தல், அவர்களுக்கு தரப்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்குதல், அவர்களின் பயிற்சியை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் ஆகியவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு செய்யப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!