கடன் வாங்க பயப்பட வேண்டாம்! சரியான முறையில் முதலீடு செய்தால் இலங்கை செல்வந்த நாடாக மாறிவிடும்!
#Sri Lanka President
#SriLanka
#IMF
#money
Mayoorikka
2 years ago
கடன் வாங்க பயப்பட வேண்டாம். மாறாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் பயப்படுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பெற்ற கடனை சரியான முறையில் முதலீடு செய்தால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதைப் போல் 15 அல்லது 20 வருடங்களில் இலங்கை செல்வந்த நாடாக மாறிவிடும் என அபேவர்தன தெரிவித்தார்.
3 வருடங்களின் பின் தமிழ் சிங்களப் புத்தாண்டை இலங்கை மக்கள் கொண்டாடுவது அதிஷ்டமானதாகும். எனினும் அது தானாக நடந்தது என யாரும் நினைத்தால் அது தவறாகும். அதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார் என சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.