நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு!

#SriLanka #Jaffna #Temple #Court Order #Police
Mayoorikka
2 years ago
நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடும்  தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்கு உட்படுத்தி இருவரும் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

எழுத்துமூல சமர்ப்பணங்களுக்காக  வழக்கு மே மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!